Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்!

Vikram Updates on 4 Film Contracts!

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்!

விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல் படமாக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். விக்ரம், ஆனந்த் ஷங்கர் இணைந்து ‘இருமுகன்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். அப்படம் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய படத்திலும் இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர்.

விக்ரம், ஆனந்த் ஷங்கர் இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட விவரங்கள் முடிவாகவில்லை. ஆனால், இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.

இச்சூழலில் ‘வீர தீர சூரன்-2’ படத்தின் முதல் பாகம் எப்போது என ரசிகர்களால் கேட்கப்படுகிறது. குறிப்பாக, கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் எதிர்பார்ப்பில் உள்ளது.

மேலும் ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தில் விக்ரம் ஒப்பந்தமாக உள்ளாரா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாவற்றும் விடையாக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தெரிய வரலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

Vikram Updates on 4 Film Contracts!
Vikram Updates on 4 Film Contracts!