இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ். ரவிக்குமார், யூகி சேது, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்கியுள்ள மிஷ்கின், இதற்கு இசையமைத்தும் உள்ளார். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் என்பதால், ‘டிரெயின்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
Get ready for the ride!🚂
#Train storms into cinemas worldwide on *DECEMBER 4!*@mysskindirector @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor @ActorRohan02 #YugiSethu @fowziafathima @editorsriwat #TapasNayak #StreetLight @vijaytelevision @RIAZtheboss
@parasriazahmed1 @saregamasouth
@teamimpr— VijaySethupathi (@VijaySethuOffl) October 12, 2026

