நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். ‘ரணபாலி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக சென்னை வந்திருந்த இருவரும், முதலமைச்சரைச் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா மந்தனா, விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்த காலம் முதல் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றது வரையிலான தனது அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், தற்போது அவர் முதலமைச்சராக இருப்பதைப் பார்ப்பது வியப்பளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், அவருக்கு தனது அன்பையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள பதிவில், “தளபதி விஜய்யுடன் மிக அழகான நேரத்தைச் செலவிட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகும் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்றார். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணி குறித்த தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். ஒரே சந்திப்பிலேயே அவர் எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார். மீண்டும் சந்திக்கும் வரை, என் அன்பும் மரியாதையும்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி, முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda 🙂— Vijay Deverakonda (@TheDeverakonda) October 12, 2026

