Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

Title Announcement of Dhanush 55

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் அவரது 55-வது திரைப்படத்திற்கு ‘ஓம்: அத்தியாயம் ஒன்று’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் சிறப்பு அறிவிப்பு வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷுடன் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஓம்: அத்தியாயம் ஒன்று’ திரைப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.