ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியான ‘பெத்தி’ திரைப்படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கூடுதலாக 5 நிமிடங்கள் 56 வினாடிகள் நீளமுள்ள புதிய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கிராம மக்களின் உரிமை மற்றும் அங்கீகாரத்திற்காக போராடும் உணர்வுபூர்வமான ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், ராம் சரண் கதாநாயகனாகவும், ஜான்வி கபூர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராம் சரணின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
திரைப்படம் வெளியாகியபோது கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆந்திரப் பிரதேசத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், மற்ற சில பகுதிகளில் எதிர்பார்த்த வசூலை எட்டவில்லை. இதனையடுத்து, ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் நோக்கில் படக்குழு புதிய காட்சிகளை சேர்த்துள்ளது.
மேலும், குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் படத்தின் டிக்கெட் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மூன்றாவது வார வசூலில் முன்னேற்றம் ஏற்படும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், புதிய காட்சிகளின் இணைப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

