Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இது தான் என் எதிர்கால லட்சியம் – மனம் திறந்த மமிதா பைஜூ

“This Is My Future Goal” – Mamitha Baiju Opens Up About Her Dreams

டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ மற்றும் சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படங்களில் நடித்துவரும் அவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது எதிர்கால லட்சியம் குறித்து பேசியுள்ளார்.

அதில், “ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. அதேசமயம் அன்பான குடும்ப வாழ்க்கையையும் உருவாக்க வேண்டும். ஒரு நாள் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, மனநிறைவு, அமைதி, உண்மையான மகிழ்ச்சி எனக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கித்தான் என் பயணம் செல்கிறது” என்று மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.