நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, “தவெக தலைவர் விஜய் பெற்றிருக்கும் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. தமிழக மக்கள் அவரிடம் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். முதலமைச்சர் விஜயும், அவரது கட்சியினரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்தின் சார்பாக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறைய சவால்களை சந்தித்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். இனியும் பல சவால்கள் வரும். அவற்றை நீங்கள் நிச்சயம் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

