AAFA Annual Summit 2026 நிகழ்வில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றிய ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறை சிந்தனையும் இலக்கில் கவனமும் அவசியம் என வலியுறுத்தினார்.
உரையின்போது அவர் பேசுகையில், “உங்களுக்கு பிடிக்காதவர்களை வெறுப்பதற்கோ, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வதற்கோ உங்கள் நேரத்தில் 1% கூட செலவிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் கனவுகள் மற்றும் இலக்குகளில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். என் மீதும் என் கலை மீதும் நீங்கள் தொடர்ந்து காட்டி வரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்,” என்று உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.
அல்லு அர்ஜுனின் இந்த ஊக்கமளிக்கும் உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, வெறுப்பை விட நேர்மறை எண்ணங்களையும் தன்னம்பிக்கையையும் முன்னிறுத்திய அவரது வார்த்தைகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி, பலரின் பாராட்டைப் பெற்று வருகின்றன. அவரது இந்தச் செய்தி, அன்பு, நன்றியுணர்வு மற்றும் இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஊக்கமூட்டும் கருத்தாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

