Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனதளவில் பாதிக்கப்பட்ட தருணம் – ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்த பேச்சு

A moment that affected me mentally – R.J.Balaji opens up

R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப் படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், அதன் வெளியீட்டு தேதியும் பலமுறை மாற்றப்பட்டது. தற்போது படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இப்படத்தின் ‘காட் மோட்…’ பாடலை தொடர்ந்து, இரண்டாவது பாடலாக ‘நாங்க நாலு பேரு…’ வெளியிடப்பட்டது. ஆனால் இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதுகுறித்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “‘நாங்க நாலு பேரு…’ பாடல் படத்தில் இடம்பெறாது. அதை வெளியிடலாம் என்ற குழுவினரின் ஆலோசனையை ஏற்று வெளியிட்டோம். ஆனால் பாடல் வெளியான பிறகு கடுமையான விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக Suriya ரசிகர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்ததால், நான் மற்றும் இசையமைப்பாளர் Sai Abhyankkar மனதளவில் பாதிக்கப்பட்டோம்,” என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.