Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

75 வயதில் மறைந்தார் பாலிவுட் மூத்த நடிகர் நானா படேகர்!

Veteran Bollywood Actor Nana Patekar Dies at 75

பாலிவுட்டின் மூத்த நடிகரும், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான நானா படேகர் தனது 75வது வயதில் காலமானார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், உடனடியாக மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிகாலை 5.20 மணியளவில் நானா படேகர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சுமார் 45 நிமிடங்கள் மருத்துவர்கள் தொடர்ந்து CPR சிகிச்சை அளித்து அவரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

நானா படேகரின் மறைவு இந்திய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர். இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தார். ‘க்ராந்திவீர்’, ‘பரிந்தா’, ‘அக்னி சாட்சி’, ‘நட்ஸம்ராட்’, ‘வெல்கம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

தமிழிலும் நானா படேகர் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகராக மட்டுமின்றி இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நாடகக் கலைஞராகவும் நானா படேகர் பணியாற்றியுள்ளார். அவரது சிறப்பான நடிப்பிற்காக 3 தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2013-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த நானா படேகரின் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.