Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘TN 2026’ – நாளை OTT-யில் வெளியீடு!

‘TN 2026’ – Releasing on OTT Tomorrow!

2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை பின்னணியாகக் கொண்டு உருவான நகைச்சுவை திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்த படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் மூலம் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமானார்.

நட்டி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரித்துள்ள இப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் OTT வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘டிஎன் 2026’ திரைப்படம் நாளை முதல் பிரபல OTT தளமான Amazon Prime Video-வில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதைத் தொடர்ந்து Simply South, Short Flix, Aha மற்றும் AP International போன்ற தளங்களிலும் இப்படத்தை ரசிகர்கள் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘TN 2026’ – Releasing on OTT Tomorrow!