இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், நடிகர் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. விஜயா சதீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் OTT வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, உழைப்பாளர் தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் நாளை மறுநாள் முதல் Sun NXTcதளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.


