Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கும் ‘சேயோன்’

Sivakarthikeyan’s Seiyon to begin shooting next week

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து, மதுரை பின்னணியில் ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் உருவாகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘சேயோன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.