ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம், கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியாகி உலகளவில் ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படம் வரும் மே 14ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், ‘துரந்தர்’ முதல் பாகம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஜூலை 10ஆம் தேதி ஜப்பானில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

