கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள பிரபலமான ஜிகர்தண்டா கடைக்கு சிவகார்த்திகேயன் திடீரென சென்றுள்ளார். அவர் ஜிகர்தண்டா சாப்பிட வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது ரசிகர்களிடம் மிகவும் எளிமையாகவும் கனிவாகவும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். மேலும், அங்கிருந்த ஒரு குழந்தைக்கு அன்புடன் முத்தமிட்ட அவர், அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்துள்ளார்.
மதுரை மக்களுடன் இயல்பாக உரையாடி, அவர்களுடன் ஜிகர்தண்டா பருகிய சிவகார்த்திகேயனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது எளிமையான மற்றும் அன்பான செயலைக் கண்டு மதுரை மக்கள் மற்றும் இணையவாசிகள் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram

