நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘அதிசய பிறவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே. கணேஷ் மற்றும் விஜய் கே. செல்லையா இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பாடல்கள் மற்றும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானத்தின் புதிய படமான ‘அதிசய பிறவி’ குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


