இந்திய திரைப்பட உலகில் பிரபலமான நடிகையாக அறியப்படும் ராஜ் ஸ்ரீ தேஷ் பாண்டே, தனது உடல்நலத்தைப் பற்றிய முக்கிய தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தன்னுக்கு முதல் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் எனக்கு முதல் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் தேவையான அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நோய் தனது மன உறுதியை எந்த வகையிலும் குறைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட தழும்புகள் தெளிவாகத் தெரிவிக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் இணைத்து அவர் கூறியதாவது, “என் உடலில் உள்ள இந்த தழும்புகள், நான் உயிர் பிழைத்த கதையைச் சொல்கின்றன. ஒவ்வொரு தழும்பும் நான் போராடினேன், மீண்டேன், வென்றேன் என்பதற்கான நினைவுச் சின்னம்” என்று உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.

