நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ திரைப்படம் அடுத்ததாக திரையரங்குகளை நோக்கி வருகிறது.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்த பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
வரும் 23-ஆம் தேதி சூர்யா தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், புதிய பாடல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Suriya sir bday special 😍 single #vishwanathandsons #VAS
— G.V.Prakash Kumar (@gvprakash) July 12, 2026

