தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் உங்க உடம்புக்கு சரக்கு தாங்கும்னா என் உடம்புக்கு தாங்கும். நான் சொல்றதெல்லாம் மீறி நீங்க குடிச்சா நானும் கட்டாயம் குடிப்பேன் என நந்தினி டயலாக் பேசிவிட்டு சென்றுவிட சூரியா அதிர்ச்சியில் உறைந்து பார்க்கிறார். பிறகு நந்தினி குட் நைட் சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினி சுரேகா விற்காக ஒரு துணியில் மஞ்சள் நனைத்து எடுத்துக்கொண்டு வந்து அருணாச்சலத்திடம் இதில் ஒரு பதினோரு ரூபாய் வைத்து சுரேகா அம்மாவுக்கு கட்டி விட்டுட்டு சரியான உடனே கோவிலை இத எடுத்துட்டு போய் உண்டியலை போட்டுடனும் என்று சொல்ல சரியான ரொம்ப சந்தோஷம்தாமா என்று அருணாச்சலம் சொல்லுகிறார். கண்டிப்பா இந்த துணியை கட்டினால் அம்மா இறங்கி போயிடு வா இதுக்கு அவ்வளவு சக்தி இருக்கு என்று சொல்லுகிறார். இப்போ சுரேகா அம்மாவுக்கு உடம்பு பரவாயில்ல அவங்களுக்கு முதல் தண்ணி ஊத்திடலாம்னு இருக்கேன் என்று சொல்ல அருணாச்சலமும் சரி என சொல்லுகிறார்.
பிறகு சுரேகா ரூமுக்கு வந்த நந்தினி உங்க கையில இந்த துணியை கட்டணும் என்று சொல்ல எனக்கு இந்த அழுக்குத் துணி எல்லாம் வேண்டாம் என்று சொல்ல உங்களுக்கு சீக்கிரமா சரியா ஆகணும்னு வேண்டிக்கிட்டு இது கட்டி இருக்கு இது உங்க கையில கட்னா உடம்பு சீக்கிரம் சரியாகிவிடும் என்று சொல்ல, எனக்கு அதெல்லாம் தேவையில்லை என்று சுரேகா சொல்லுகிறார். இருந்தாலும் நந்தினி கட்டாயப்படுத்தி கையைப் பிடிக்க சுரேகா வாங்கி விசிறி அடிக்கிறார். உடனே நந்தினி மகமாயி மன்னிச்சிடுமா என்று சொல்லிவிட்டு உங்களுக்காக அதை நானே கட்டுகிறேன் என சொல்லி நந்தினி கையில் கட்டி கொள்கிறார். பிறகு ரூமுக்கு வந்த அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் ஏதாவது வேலையா இருக்கியா என்று கேட்க கொஞ்சம் உடம்புக்கு முடியல அதனால வீட்டிலேயே ஃபைல் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல, சரி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சுரேகாவுக்கு இப்போ உடம்புக்கு பரவாயில்லையாம் முதல் தண்ணி ஊத்திடலாம்னு சொன்னா என்று சொன்னால் சரி நல்ல விஷயம் தானே ஊத்திடலாம் என்று சொல்ல சரி நீ செஞ்சிடுவேன் என்று சொல்லிவிட்டு அருணாச்சலம் போக சுந்தரவல்லி கூப்பிட்டு எனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார். உனக்கு தெரியலனா என்ன மாதவியை ஊத்த சொல்லு என்று சொல்ல எனக்கே தெரியாது அவளுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார்.
உனக்கும் தெரியாது உன் பொண்ணுக்கும் தெரியாதுன்னு எனக்கு தெரியும் அப்பயாவது நந்தினி ஓட அருமை தெரியுதான்னு தான் கேட்டேன் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி என் பொண்ணுக்கு தண்ணி ஊத்தக்கூடாது ஏன் ஸ்டேட்டஸ் வேற என் ஸ்டேட்டஸ் வேற அப்படின்னு சொன்னேன்னா யாருனா கோடீஸ்வரர் பொண்ண தான் கூப்பிடனும் என்று சொல்லுகிறார் சரி நீ என்கூட ஒரு நிமிஷம் வா நந்தினி மேல இவ்வளவு வன்மமா இருக்குல்ல வந்து பாரு என்று சொல்லி அழைத்து வர நந்தினி தண்ணீர் வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.
பிறகு இருவரும் வந்து நிற்க அருணாச்சலம் என்னமா பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க சுரேகா அம்மாவுக்கு தண்ணி ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல பார்த்து பண்ணுமா ஏதாவது ஹெல்த் பண்ண வேண்டும் என்றால் என்னை கூப்பிடு என்று சொல்ல சுந்தரவல்லி சென்று விடுகிறார். நந்தினி தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு சுரேகாவை வந்து கூப்பிட என்னால் வர முடியாது என்று சொல்ல, நீ போய் எங்க அம்மாவ வர சொல்லு என்று சொல்ல அவங்க யாரும் வரல என்னதான் பண்ண சொல்லி இருக்காங்க எல்லா ரெடியா இருக்கு வாங்க என்று சொல்ல சுரேகாவும் வேறு வழி இல்லாமல் வருகிறார். நந்தினி அழைத்து வந்து உட்கார வைத்து தண்ணீர் ஊற்றுகிறார். பிறகு தலையை துவட்டி விட்டு பூஜை ரூமுக்கு அழைத்து வந்து கற்பூரம் தீவாரதனை செய்து சாமி கும்பிடுகிறார். மறுபக்கம் அருணாச்சலம் நந்தினி ஒரே ஆளா வேலை செஞ்சு கஷ்டப்பட்டு இருக்கா நீ கொஞ்சம் உதவி பண்ணலாம் என்று சொல்ல அவ வேலைக்காரி தானே பண்ணட்டும் என சொல்லுகிறார். பிறகு நந்தினி வந்து காபி கொடுக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுரேகா கைவலியில் இருக்க சூர்யா எனக்கு உன்ன பத்தி தெரியும் நந்தினி நான் இப்படி போன உடனே நீ அப்படி போக கூடாது என்று சொல்லி சூரியா பாத்ரூமுக்குள் போக நந்தினி வாசல்வரை ஓடிப் போய் எட்டிப் பார்க்கிறார் உடனே சூர்யா வர கண்ணாடியின் தலை வாருவது போல பண்ணுகிறார். நான் அந்தப் பக்கம் போன உடனே நீ இந்த பக்கம் வாசல்ல எட்டி பார்த்திருப்ப என்று சொல்லுகிறார் பிறகு சுரேகா ரூமுக்கு சென்ற நந்தினி சுரேகா அம்மாவுக்கு நான் மஞ்சள் கயிறு கட்டி விட வந்த அவங்க தூக்கி வீசி விட்டாங்க அதனாலதான் கை வலி வந்து இருக்கும் என சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லுகிறார்.


