நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘சத்தியவான் சாவித்திரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இப்படத்தை பிரவீன் எஸ். விஜய் இயக்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் ஒரு வழக்கறிஞராக (லாயர்) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார்.
மேலும், நடிகர்கள் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, Zee Studios நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Calm face. Unstoppable force. Now it’s her game..
Presenting the First Look of #SathyavanSavithiri.🔥Second Look hits today at 5 PM. ⚡️@KeerthyOfficial @DirectorMysskin @PraveenSVijaay @DrumsticksProd @zeestudiossouth @SamCSmusic #Charukesh @Bala_actor @ShilpaManjunat pic.twitter.com/WWU4qcjXPr
— Tamilstar (@tamilstar) April 30, 2026

