தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அட்லீ, தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் ‘ராக்கா’ படத்தை இயக்கி வருகிறார். இதில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தீபிகா படுகோனே இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளதால், ‘ராக்கா’ படப்பிடிப்பில் மாற்றங்கள் வருமா என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக, அவரைச் சார்ந்த ஆக்ஷன் காட்சிகள் குறைக்கப்படலாம் என்ற பேச்சும் பரவியது.
ஆனால், தீபிகா கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டாம் என்பதில் இயக்குநர் அட்லீ உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆக்ஷன் காட்சிகளுக்காக ‘பாடி டபுள்’ (டூப்) பயன்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீபிகாவை ஒத்த தோற்றமுடைய மூன்று பெண்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்ஷன் காட்சிகளை தவிர மற்ற முக்கிய காட்சிகளில் தீபிகா வழக்கம்போல நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், ‘ராக்கா’ படத்தின் படப்பிடிப்பு எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என கூறப்படுகிறது.

