தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் தளபதி 66 என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். மேலும் படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.
அதாவது பிரபல ஒளிப்பதிவாளரான கார்த்திக் பழனி இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் உதவியாளராக பணியாற்றிய இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ஆதி-புருஷம் என்ற படத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Palani in Thalapathy 66 Movie

