Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் – சோபிதா குறித்து நாக சைதன்யா நெகிழ்ச்சி

I've Learned a Lot from Her - Naga Chaitanya Opens Up About Sobhita

நடிகை சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணம், பாரம்பரியம் மற்றும் நவீன சிந்தனைகளை இணைக்கும் தனித்துவமான ஆளுமை ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

சோபிதாவிடம் தனக்குப் பிடித்த குணங்கள் குறித்து பேசிய நாக சைதன்யா, “சோபிதாவிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. குறிப்பாக, அவருடைய துடிப்பான குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரம்பரிய கலாச்சாரத்தையும் நவீன சிந்தனைகளையும் அழகாகக் கலந்த தனித்துவமான ஆளுமை அவர். எப்போதும் புதுப்புது விஷயங்களைக் கண்டறியவும், அனுபவிக்கவும் தயாராக இருப்பார்” எனப் புகழ்ந்துள்ளார்.

தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “நாங்கள் விடுமுறைக்குச் செல்லும்போது எனக்கென்று ஒரு திட்டம் இருக்கும். அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனால், என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிவிடுவேன். ஆனால் சோபிதா அப்படியல்ல. உடனடியாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதற்கான வழியைக் கண்டுபிடித்து முன்னோக்கிச் செல்வார்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “அவருடைய இந்த இயல்பைப் பார்த்து நானும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயல்பாகச் செயல்படவும், புதிய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளவும் அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார். அவரிடம் இருக்கும் இளமையான துடிப்பு, ஆர்வம் மற்றும் ஆற்றல் எனக்கு மிகவும் பிடிக்கும். சோபிதாவை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால், அது ‘காதல்’” என தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே, நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி நடிகை சோபிதா துலிபாலா, அவருக்கு முத்தமிடும் அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.