Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

How Is TVK’s Government Doing G.V. Prakash Answers in One Word

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.

தேசிய விருதைப் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது முறையாக தேசிய விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த முறை தமிழ் திரையுலகிற்கு அதிக எண்ணிக்கையில் தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் கூறினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி இருக்கிறது?” என ஜி.வி.பிரகாஷிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அவர், “சூப்பர்… அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என சுருக்கமாக பதிலளித்தார்.

தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் சென்னை திரும்பிய ஜி.வி.பிரகாஷிடம் எழுப்பப்பட்ட இந்த அரசியல் கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.