நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஐ எம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் வெற்றியால் கவனம் பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் மிகவும் ஸ்டைலிஷான படைப்பாக இருக்கும் என அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பான்-இந்திய வெளியீடாக இப்படம் திரையரங்குகளுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘ஐ எம் கேம்’ திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
The countdown ends and the real game begins! 💥 ‘I’m Game’ is locked, loaded, and arriving in theaters this August 20 for the ultimate Onam celebration! 🥁🔥 Get ready to witness the magic on the big screen. 🎬✨
#ImGameMovie #August20 #FestivalEntertainer@NAHASKh1… pic.twitter.com/4JMamcBu9d— Dulquer Salmaan (@dulQuer) May 20, 2026

