Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'Dhurandhar The Revenge' OTT Release Date Announced

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டு பாகங்களாக வெளியான இந்த திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து கவனம் ஈர்த்தது.

முதல் பாகம் கடந்த டிசம்பர் மாதமும், இரண்டாம் பாகம் இந்தாண்டு மார்ச் மாதமும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது. மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சாஸ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் ரூ.1,150 கோடிக்கும் அதிகமாகவும், உலகளவில் ரூ.1,780 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படும் இந்த படம், தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

அதன்படி, ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் நாளை முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் இப்படத்தை Netflix தளத்தில் கண்டு ரசிக்கலாம்.