Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

Bethlehem Family Unit Becomes the Highest-Grossing Malayalam Film

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா’ திரைப்படம் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தது.

கிரிஷ் ஏடி இயக்கத்தில் காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, வெளியான 24 நாட்களில் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உலகளவில் ரூ.300 கோடி வசூலை எட்டிய இரண்டாவது மலையாள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படம், ‘லோகா’ படத்தைவிட குறைந்த நாட்களிலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிவின் பாலி, மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், ஷ்யாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வினய் ஃபோர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஃபஹத் ஃபாசில் அண்ட் பிரண்ட்ஸ், பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் ஒர்க்கிங் கிளாஸ் ஹீரோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.