Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்.. ஷாக்கான ரசிகர்கள்

Ajith in Latest Photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வலிமை. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித் 61 என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதில் அஜித் குமார் அவர்கள் காலேஜ் புரபசர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகி உள்ள சமீபத்திய புகைப்படத்தில் அஜித் குண்டாக இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த படத்தில் அஜித் கிட்டத்தட்ட ஐந்து கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அவைகளில் இது ஒரு கெட்டப் ஆக இருக்கும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அஜித் ஸ்லிம்மாக இருப்பாரா அல்லது குண்டாக இருப்பாரா என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.

Ajith in Latest Photos
Ajith in Latest Photos