Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்.. ‘அசரீரி’ படத்தின் அதிரடி அறிவிப்பு!

Fahadh Faasil Teams Up with 96 Director Prem Kumar for Thriller Asareeri

‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரேம்குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ படத்தின் மூலம் தனது தனித்துவமான இயக்கத்தை மீண்டும் நிரூபித்தார். இதையடுத்து, ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அசரீரி’ திரைப்படம், வரும் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.