நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக உள்ளார். அவரது திரைப்பயணத்தின் கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.80 கோடியைத் தாண்டியதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, 4 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அனிருத் தனது எக்ஸ் தளப் பதிவில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய படங்களை குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’, ‘ஜனநாயகன்’ என ஐந்து படங்கள் மூலம் விஜய்யுடன் பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவம் என்று அனிருத் தெரிவித்துள்ளார்.
மேலும், “என்றென்றும் நான் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளுக்கும், என் மீதான அளப்பரிய நம்பிக்கைக்கும் நன்றி விஜய் சார். இசை என்றும் நிலைத்திருக்கும்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️ pic.twitter.com/kt9On6Ms1L— Anirudh Ravichander (@anirudhofficial) July 27, 2026

