நடிகை சமந்தா தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் கதைக்களத்தில் சமந்தா நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம், வெளியான 22 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் ஈட்டிய இப்படம், விரைவில் ரூ.200 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தெலுங்கு சினிமாவில் பெண் கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வரும் 17-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் இப்படத்தை கண்டு ரசிக்கலாம்.

