Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“என் கணவரைவிட உங்களை அதிகம் நேசிக்கிறேன்!” – ரசிகையின் வார்த்தையால் வெட்கப்பட்ட ஷாருக்கான்

Shah Rukh Khan Left Blushing by a Fan's Remark

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், மங்களூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடிய அவர், ரசிகர்களுடன் நேரடியாக உரையாடியும் மகிழ்வித்தார்.

அப்போது பெண் ரசிகை ஒருவர், “என் கணவரைவிட உங்களை அதிகம் நேசிக்கிறேன்” என்று கூறியதும், அரங்கமே சிரிப்பில் மூழ்கியது. அதற்கு ஷாருக்கான் வெட்கப் புன்னகையுடன், “இதை நீங்கள் என்னிடம் தனியாக சொல்லியிருக்கலாம்!” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

தொடர்ந்து அந்த ரசிகையிடம் பேசிய ஷாருக்கான், “இது உங்கள் பேச்சுரிமை. உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதேபோல் உங்கள் கணவரும் இதை புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். உங்களையும், உங்கள் கணவரையும், உங்கள் குடும்பத்தினரையும் நான் நேசிக்கிறேன். மிக்க நன்றி,” என்று அன்புடன் தெரிவித்தார்.

ஷாருக்கானின் நகைச்சுவை உணர்வும், சூழ்நிலையை அழகாக கையாண்ட விதமும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களின் பலத்த கைத்தட்டலையும் பாராட்டையும் பெற்றது.