Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த நடிகர் சூர்யா

Actor Suriya Visits Late Director K. Bhagyaraj Family

மாரடைப்பால் உயிரிழந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல் இன்று நண்பகல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தமிழ் திரையுலகிற்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதற்கு முன்பாக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா, இயக்குநர் பாக்யராஜின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குறிப்பாக மகன் சாந்தனுவுக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் பாக்யராஜின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.