Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Praises Chief Minister Vijay

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையொட்டி சென்னையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியபோது, முதலமைச்சர் விஜய் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறியதாவது:

“ஜேசன் சஞ்சயின் பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன். இதற்காக முதலமைச்சர் விஜய் எனக்கு போன் செய்து, ‘நண்பா, அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்’ என்று கூறினார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். சஞ்சய்க்கு என்னை பிடித்திருப்பது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

நான் சஞ்சயின் ‘சிக்மா’ படப்பிடிப்பு தளத்திற்கும் சென்றிருந்தேன். எனது நண்பர் ரோகன் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். நான் சஞ்சயின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதை அறிந்த விஜய், ரோகன் மூலமாக எனக்கு அன்பான அரவணைப்பை அனுப்பி வைத்தார். ‘நான் கொடுத்ததாக சொல்லி இதை அவரிடம் கொடுங்கள்’ என்று கூறி அனுப்பியிருந்தார். அவருடைய அந்த செயல் மிகவும் இனிமையாகவும், கனிவாகவும் இருந்தது. ‘பத்தா’ படத்தை எனக்கு கொடுத்ததற்காக அட்லிக்கு நன்றி” என்றார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் குறித்து அவர் பகிர்ந்துள்ள இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.