Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay Deverakonda – Rashmika Mandanna’s Ranabaali Release Date Announced

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா, தற்போது ‘ரணபாலி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 19ஆம் நூற்றாண்டின், குறிப்பாக 1870-களின் பின்னணியில் உருவாகியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறை மற்றும் பெரும் பஞ்சத்தை மையமாகக் கொண்டு, தனது நிலத்தையும் மக்களையும் காப்பதற்காக பிரிட்டிஷ் கமிஷனரை எதிர்த்து போராடும் கிளர்ச்சிப் போராளியின் கதையாக ‘ரணபாலி’ உருவாகியுள்ளது.

இதில் விஜய் தேவரகொண்டா, கம்பீரமான தோற்றத்தில் ‘ரணபாலி’ என்ற ஆக்ரோஷமான கிராமத்து போர்வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரமான ‘ஜெயம்மா’வாக நடித்துள்ளார்.

அஜய் – அதுல் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் மற்றும் டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

முதலில் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘ரணபாலி’, தற்போது தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.