இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாக “KHxRK” என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு உச்ச நட்சத்திரங்களையும் ஒரே திரையில் இணைக்கிறது.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக, “யார் ஹீரோ?” என்று ரஜினி மற்றும் கமல், இயக்குநர் நெல்சனிடம் கேட்கும் வசனம் ரசிகர்களிடையே டிரெண்டானது.
மேலும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நடிகை திரிஷா கிருஷ்ணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படத்திலும் திரிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

