இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், “த்ரிஷ்யம்” திரைப்படத்தின் மூன்றாம் பாகமான “த்ரிஷ்யம் 3” தற்போது உருவாகியுள்ளது. முந்தைய பாகங்களைத் தொடர்ந்து, ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கையில் நடைபெறும் புதிய விறுவிறுப்பான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.
“த்ரிஷ்யம் 3” திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
மேலும், “த்ரிஷ்யம் 3” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Amazon Prime Video கைப்பற்றியுள்ளது.
#Drishyam3 Official Trailerhttps://t.co/plnDy1AhAv pic.twitter.com/FDuLqGwrgg
— Mohanlal (@Mohanlal) May 9, 2026

