Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 171 படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு,வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது வேட்டையன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஞானவேல் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படியான நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகும் என ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிப்பு வெளியானது. இப்படியான நிலையில் அடுத்ததாக இந்த படத்திற்கு கூலி என டைட்டில் வைத்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.