தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் விஜயா ராசி இல்லாதவன் என மீனாவை அவமானப்படுத்த ரூமுக்குள் சென்ற மீனா பாட்டிக்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்லி அழுது புலம்புகிறார். நாச்சியார் பாட்டி உனக்கு நாளைய பொழுது நல்லபடியாக விடியும். விஜயா சொல்வதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத என ஆறுதல் சொல்லி மீனாவை தேற்றுகிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வரும் முத்து மீனா எங்கே எனக்கேட்டு ரூமுக்குள் வர மீனா கண்களை துடைத்துக் கொண்டு என்னங்க என்று கேட்க உனக்கு புடிச்சதை வாங்கிட்டு வந்து இருக்கேன் என்னன்னு சொல்லு பார்க்கலாம் என்று கேள்வி கேட்க என்ன பூ வாங்கிட்டு வந்து இருக்கீங்களா என்று மீனா கேட்கிறார். பூ கட்டறவளுக்கே நான் எதுக்கு பூ வாங்கி தரணும் என்று சொல்லும் முத்து உனக்கு பிடிச்ச ஒன்று நீ விரும்பி சாப்பிடுவ என்று சொல்ல மீனா தெரியல என்று கூறுகிறார்.
இதனால் சரி கண்ண மூடு என சொல்லி மீனாவின் கண்களை மூடிய பிறகு முத்து நுங்கை முகத்தின் அருகில் கொண்டு போக மீனா நுங்கு என கண்டுபிடிக்கிறார். பிறகு தன்னுடைய அப்பாவுக்கும் கொடுக்கும் முத்து மீனா கண்கள் சிவந்து இருப்பதை பார்த்து காரணம் கேட்க அவர் சமைக்கும்போது கண்ல காரம் பட்டுடுச்சு அதுதான் என்று சொல்லி சமாளிக்கிறார்.
அதன் பிறகு முத்து வேலைக்கு கிளம்பியதும் அண்ணாமலை இதுதான் மீனாவோட நல்ல மனசு என விஜயாவுக்கு அறிவுரை சொல்கிறார். இவளோட கையை ஓங்க விடக்கூடாது கிச்சன்லயே போட்டு அடிக்கணும். எனக்குப் பிறகு இந்த வீட்டில ரோகினி ஓட அதிகாரம் தான் இருக்கணும் என விஜயா முடிவெடுக்கிறார்.
மறுநாள் காலையில் மீனா வாசல் தெளித்து கோலம் போட்டு உள்ளே வரும்போது ஆட்டோ சத்தம் கேட்டு திரும்பி பார்க்க பாட்டி வந்து இறங்குகிறார். சந்தோஷத்துடன் அவரை வீட்டுக்குள் அழைத்து வர முத்துவும் பாட்டியை பார்த்து சந்தோஷப்படுகிறார். அண்ணாமலையும் அம்மாவை நல்லபடியாக வரவேற்க விஜயா திக்கிமுக்காடி நிற்கிறார்.
அதன் பிறகு பாட்டி இது தான் மீனாவோட குணம் இது எல்லாம் நீ அவகிட்ட கத்துக்க வேண்டி இருக்கு என்று சொல்ல விஜயா கடுப்பாகிறார். மேலும் முத்து மற்றும் மீனாவுக்கு தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடத்தி முதல் இரவு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சொல்ல விஜயா அதெல்லாம் இப்ப எதுக்கு என தடுக்க முயற்சி செய்ய நாச்சியார் பாட்டி நான் எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு வந்துட்டேன் என சொல்கிறார்.
மேலும் பாட்டி காபி போட்டு எடுத்து வர சொல்லி விஜயாவை வேலை வாங்குகிறார். மீனாவை ரூமுக்குள் அழைத்து சென்ற பாட்டி நீ என்கிட்ட அம்மா மாதிரி நினைச்சு உன்னுடைய கஷ்டத்தை சொன்ன, அப்போ ஒரு அம்மாவா நான் செய்ய வேண்டியது செய்யணும் என்று சொல்ல மீனா பாட்டி மடியில் படுத்துக் கொண்டு கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


