Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

Shiv Panditt Makes His Kollywood Comeback with Sigma

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். அவர் நடிக்கும் புதிய படம் “சிக்மா”.

இதுகுறித்து பேசிய ஷிவ் பண்டிட், “தமிழ் சினிமா எனக்கு மிகவும் நெருக்கமானது. ‘லீலை’ மூலம் கிடைத்த அன்பை நான் மறக்க முடியாது. ‘சிக்மா’ என் கோலிவுட் பயணத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜேசன் சஞ்சய் போன்ற தெளிவான பார்வை கொண்ட இளம் இயக்குநருடன் பணியாற்றியது மகிழ்ச்சி” என்றார்.

சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், யோக் ஜப்பி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையமைப்பிலும், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ள “சிக்மா” திரைப்படம் ஜூலை 31 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.