Shah Rukh Khan Visits Mumbai’s Famous Lalbaugcha Raja with Family
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மும்பையில் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் பந்தலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.
மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மேலாளர் பூஜா டட்லானி ஆகியோர் அவருடன் சென்றனர். ஷாருக்கானின் வருகையை அறிந்த ஏராளமான பக்தர்களும் ரசிகர்களும் அவரைக் காண அங்கு திரண்டதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் ஷாருக்கான் நீல நிற குர்தாவிலும், சுஹானா பச்சை நிற பாரம்பரிய உடையிலும், கௌரி கான் மஞ்சள் நிற உடையிலும் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு கணேஷ் சதுர்த்தியை முன்னிட்டு பிருத்விராஜ் சுகுமாரன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக், ஷில்பா ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் லால்பாக்சா ராஜாவை தரிசித்துள்ளனர்.
மேலும், தனது குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் குறித்தும் ஷாருக்கான், ‘AskSRK’ நிகழ்வில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…