Sengulam Announcement Video Featuring Gautham Karthik Released
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் ‘செங்குலம்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ள நிலையில், கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய அவதாரத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Every Land Has a Story. Every Story Has a Name 🔥
Presenting the title look of #KRG05 – #Sengulam
IN CINEMAS 2027
Produced by #KannanRavi @KRGOffl
Co Produced by #DeepakRavi@Gautham_Karthik #chinnasamyponnaiah @thisisysr @GiftsonRobert #TamilArasan @MaheshMathewMMS #Monic https://t.co/bLcDqr1DDQ
— KANNAN RAVI GROUPS (@KRGOffl) November 13, 2026
O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy |…
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் இப்படத்தின் கதை தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்…
தலைமுடி வியாபாரம் செய்து வருபவர் ஏ. வெங்கடேஷ். அவரிடம் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார் லிவிங்ஸ்டன். ஒருநாள் ரூ.5 கோடி மதிப்புள்ள…
இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தனித்துவமான…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ…
‘உறியடி’ திரைப்படத்தில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அறிவு’…