John Doe Movie review
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் இப்படத்தின் கதை தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் நீரவ் திடீரென காணாமல் போகிறான். இதற்கிடையே, கேரள காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் அர்ஜுன் தாஸ், எல்லைப் பகுதியில் அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவனின் சடலம் கிடைத்தது தொடர்பான விசாரணைக்காகத் தமிழகம் வருகிறார்.
விசாரணையின் போது காணாமல் போன நீரவுக்கும், தான் விசாரிக்கும் சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதை அறியும் அர்ஜுன் தாஸ், தொடர்ந்து விசாரணையில் இறங்குகிறார். இதே வழக்கை விசாரித்து வரும் பெண் காவல் அதிகாரியான சஞ்சனா நடராஜன், ஆரம்பத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஒத்துழைக்க மறுத்தாலும், பின்னர் அவருடன் இணைந்து விசாரணையைத் தொடர்கிறார்.
இந்த விசாரணையில், கடத்தப்படும் சிறுவர்கள் அனைவருக்கும் மேல்வரிசைப் பற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதை அர்ஜுன் தாஸ் கண்டறிகிறார். இந்த முக்கியமான தடயத்தின் மூலம் குற்றவாளியை நெருங்க முயற்சிக்கிறார். இதற்கிடையே, காணாமல் போன நீரவ் உயிருடன் திரும்பி வந்தாலும், தனது உண்மையான பெயரையும் அடையாளத்தையும் மறந்து, தன்னை கேப்ரியல் என்று அறிமுகப்படுத்துகிறான்.
இறுதியில் நீரவுக்கு என்ன நடந்தது? சிறுவர்கள் கடத்தப்படுவதன் பின்னணி என்ன? இந்தக் குற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சஞ்சனா நடராஜனின் பெண் காவல் அதிகாரி கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அந்தக் கதாபாத்திரத்தை அவர் திறம்படக் கையாண்டிருந்தாலும், சில இடங்களில் அவரது அதட்டலான அணுகுமுறை சற்று அதிகமாகத் தெரிகிறது. சிறுவன் நீரவாக நடித்திருப்பவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. சாரா, அனுபமா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
இயக்குநர் மதுமிதா காட்சிகளை அமைத்த விதமும், அவற்றைப் படமாக்கிய முறையும் சிறப்பாக உள்ளன. பிரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவு மலைப்பிரதேசங்களின் அழகையும், திரில்லர் உணர்வை ஏற்படுத்தும் உட்புறக் காட்சிகளையும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது. படத்தின் வண்ணத் தேர்வும் கதையின் மனநிலைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. முஜீப் மஜீத் மற்றும் ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்குப் பக்கபலமாக இருக்கிறது.
மிகவும் இயல்பாகத் தொடங்கும் திரைப்படம், சிறுவர்கள் கடத்தல் தொடர்பான விசாரணையை மையமாகக் கொண்டு படிப்படியாகச் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. சில வழக்கமான திருப்பங்களுக்குப் பிறகு வரும் இடைவேளைக் காட்சி எதிர்பாராத திருப்பமாக அமைந்து கவனம் ஈர்க்கிறது. இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை வேகமெடுத்து விறுவிறுப்பாக நகர்கிறது.
ஆனால், சைக்கோ கதாபாத்திரம் ஒன்றை மையமாகக் கொண்டு கதை நகரும்போது, அந்தக் கதாபாத்திரத்தின் செயல்களுக்குப் பின்னால் வலுவான காரணமும் பின்னணியும் இருக்க வேண்டியது அவசியம். குற்றவாளி யார் என்பது தெரியவந்த பிறகு, அவர் ஏன் இந்தக் குற்றங்களைச் செய்கிறார் என்பதற்கான காரணத்தையும் அதன் பின்னணியையும் அழுத்தமாகச் சொல்லத் தவறியிருப்பது படத்தின் சிறிய பலவீனமாக அமைந்துள்ளது.
O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy |…
தலைமுடி வியாபாரம் செய்து வருபவர் ஏ. வெங்கடேஷ். அவரிடம் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார் லிவிங்ஸ்டன். ஒருநாள் ரூ.5 கோடி மதிப்புள்ள…
இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தனித்துவமான…
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ…
‘உறியடி’ திரைப்படத்தில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அறிவு’…