No One Listens to Me at Home - Shah Rukh Khan’s Hilarious Revelation
இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் பேச்சுத் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாருக்கான், தனது குடும்ப வாழ்க்கை மற்றும் மனைவி கவுரி கான் குறித்துப் பேசியது கவனம் பெற்றுள்ளது.
அப்போது பேசிய அவர், “எங்கள் வீட்டில் எனக்கு எதையும் செய்ய அனுமதி கிடையாது. என் மனைவிக்கு எதிராக ஒரு வார்த்தைகூடப் பேச முடியாது. வீட்டில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள், படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது என எதைப் பற்றியும் என்னால் புகார் தெரிவிக்க முடியாது.
வீட்டில் இருக்கும் ஓவியங்கள், மொட்டை மாடி, கூரை, படிக்கட்டுகள், ஏன் லிப்ட் குறித்து கருத்துச் சொல்வதற்குக்கூட எங்களுக்கு உரிமை கிடையாது. வீட்டில் நான் செய்ய வேண்டிய ஒரே வேலை, ‘வாவ் கவுரி! எவ்வளவு பிரம்மாண்டமான வீட்டைக் கட்டியிருக்கிறாய்!’ என்று அமைதியாக அமர்ந்து பாராட்டுவதுதான்.
ஆர்யன், சுகானா, அப்ராம் என எனது பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே என்ன வேண்டுமானாலும் சத்தம் போட்டுக் கொள்ளலாம். ஆனால், வீட்டுக்குள் இறுதி முடிவு எடுப்பது கவுரிதான்” என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது சொந்த வீட்டுக் கனவு குறித்துப் பேசிய அவர், “எனது பெற்றோர் நான் இளம் வயதில் இருக்கும்போதே இறந்துவிட்டனர். அதனால், என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையாக இருந்தது சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான். கவுரியைத் திருமணம் செய்துகொண்டபோது எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது.
ஒரு வீட்டுக்காக நீங்கள் உண்மையாகப் பிரார்த்தனை செய்தால், வாழ்க்கையில் உங்களுக்கு மிக அழகான வீடு கிடைக்கும். எப்போதும் பெரிதாகச் சிந்தியுங்கள், பெரிதாக நம்புங்கள்” என்று கூறினார்.
மனைவி கவுரி கான் குறித்த ஷாருக்கானின் நகைச்சுவையான பேச்சும், தனது சொந்த வீட்டுக் கனவு குறித்த நெகிழ்ச்சியான பகிர்வும் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy |…
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் இப்படத்தின் கதை தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்…
தலைமுடி வியாபாரம் செய்து வருபவர் ஏ. வெங்கடேஷ். அவரிடம் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார் லிவிங்ஸ்டன். ஒருநாள் ரூ.5 கோடி மதிப்புள்ள…
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ…
‘உறியடி’ திரைப்படத்தில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அறிவு’…