Categories: Movie Reviews

பிளாக் கோல்டு திரைவிமர்சனம்

தலைமுடி வியாபாரம் செய்து வருபவர் ஏ. வெங்கடேஷ். அவரிடம் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார் லிவிங்ஸ்டன். ஒருநாள் ரூ.5 கோடி மதிப்புள்ள தலைமுடியை ஏற்றிக்கொண்டு லிவிங்ஸ்டன் பயணம் மேற்கொள்கிறார். ஆனால், செல்லும் வழியில் அவரும், அவருடன் எடுத்துச் சென்ற தலைமுடியும் திடீரென மாயமாகின்றன. இதனால் அதிர்ச்சியடையும் ஏ. வெங்கடேஷ், காவல்துறையின் உதவியை நாடுகிறார்.

இதற்கிடையில், தனது தந்தை லிவிங்ஸ்டன் காணாமல் போனதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதை உணரும் வெற்றி, உண்மையைக் கண்டறியத் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார். அவரது முயற்சிக்குப் பலன் கிடைத்ததா? காணாமல் போன லிவிங்ஸ்டனுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

தந்தை மீது விழுந்த பழியைத் துடைப்பதற்காக அதன் பின்னணியைத் தேடி அலையும் காட்சிகளில் வெற்றி தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். புன்னகை ததும்பும் காட்சிகளில் பிரியாலயா ரசிகர்களைக் கவர்கிறார். லிவிங்ஸ்டனின் இயல்பான, அப்பாவித்தனமான நடிப்பும் கவனம் பெறுகிறது. இவர்களுடன் ஏ. வெங்கடேஷ், அபிராமி வெங்கடாசலம், மூர்த்தி, அரோல் டி. சங்கர், கராத்தே வெங்கடேசன் உள்ளிட்டோரின் பங்களிப்பும் படத்திற்குப் பலம் சேர்க்கிறது.

கவாஸ்கர் அவினாஷின் இசையும், சந்தோஷ் குமார் வீராசாமியின் ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.

தலைமுடிக்கும் ரூ.5 கோடி மதிப்பா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குநர் தீரன் அருண்குமார். புதுமையான கதைக்கரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினாலும், திரைக்கதையில் இன்னும் கூடுதலான விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் சேர்த்திருந்தால், இந்தத் தங்கம் போன்ற தலைமுடி இன்னும் அதிகமாக ஜொலித்திருக்கும்.

Suresh

Recent Posts

O.M Trailer

O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy |…

23 minutes ago

ஜான் டோ திரைவிமர்சனம்

கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் இப்படத்தின் கதை தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்…

58 minutes ago

எங்க வீட்டுல என் பேச்சுக்கே இடமில்லை – ஷாருக்கான் கலகல பேச்சு!

இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தனித்துவமான…

2 hours ago

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் செங்குலம் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு…

3 hours ago

ரூ.1,000 கோடி வசூலை கடந்தது ‘ராமாயணா’

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ…

3 hours ago

‘அறிவு’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியானது!

‘உறியடி’ திரைப்படத்தில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அறிவு’…

3 hours ago