Ramayana Crosses ₹1,000 Crore at the Box Office
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான 8 நாட்களிலேயே இப்படம் உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்த 11-வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ‘ராமாயணா’ பெற்றுள்ளது. ஏற்கனவே ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த ‘தங்கல்’ திரைப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இப்படத்தையும் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு வசூலைப் பொறுத்தவரை, வெளியான எட்டு நாட்களில் இந்தியாவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து ரூ.675.05 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், வெளிநாடுகளில் ரூ.358.50 கோடி வசூலித்துள்ள நிலையில், உலகளாவிய மொத்த வசூல் ரூ.1,033.55 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியாவில் ரூ.560 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததன் மூலம் ஷாருக்கானின் ‘பதான்’ (ரூ.544.28 கோடி), ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ (ரூ.556.36 கோடி) ஆகிய படங்களின் வாழ்நாள் வசூல் சாதனைகளையும் ‘ராமாயணா’ முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியத் திரைப்படங்களில் மிகக் குறுகிய காலத்தில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. முன்னதாக ‘புஷ்பா 2: தி ரூல்’ மற்றும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஆகிய திரைப்படங்கள் ஏழு நாட்களிலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியிருந்தன.
தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த ‘ராமாயணா’ திரைப்படம், எட்டு நாட்களிலேயே ரூ.1,000 கோடி வசூலைக் கடந்திருப்பது இந்தியத் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
A legendary tale, a historic box office triumph! 🏹🔥
#Ramayana conquers the ₹1,000 CRORE milestone at the worldwide box office, taking Indian cinema’s epic storytelling to extraordinary heights! ❤️🔥
A PHENOMENAL BLOCKBUSTER winning hearts across the globe! ✨
#Ramayana continues its glorious theatrical run!— Ramesh Bala (@rameshlaus) November 13, 2026
O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy |…
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் இப்படத்தின் கதை தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்…
தலைமுடி வியாபாரம் செய்து வருபவர் ஏ. வெங்கடேஷ். அவரிடம் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார் லிவிங்ஸ்டன். ஒருநாள் ரூ.5 கோடி மதிப்புள்ள…
இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தனித்துவமான…
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு…
‘உறியடி’ திரைப்படத்தில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அறிவு’…