தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், தனது கையெழுத்திடப்பட்ட காசோலைகளை அனுமதியின்றி எடுத்துச் சென்று, அதில் தொகை உள்ளிட்ட விவரங்களை நிரப்பி ரூ.46 கோடி பணத்தை மோசடி செய்ய அம்பிகா முயன்றதாக ராதா குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் தனது சகோதரரும் அம்பிகாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்னை குடும்பச் சொத்து பகுதிக்குள் நுழையவிடாமல் அம்பிகாவும், சகோதரரும் தடுத்து வருவதாகவும் ராதா புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார். ராதா அளித்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள அம்பிகா, தங்களுக்குள் நீண்டகாலமாக நிலம், தொழில் மற்றும் தங்கம் தொடர்பாக குடும்பச் சொத்து பிரச்சினைகள் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்களைத் தீர்ப்பதற்காக கடந்த ஜூலை மாதமே தான் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாகவும், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அம்பிகா கூறியுள்ளார்.

மேலும், அந்த வழக்கின் அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ராதா தனக்கு 5 காசோலைகளை வழங்கியதாகவும் நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.

Suresh

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

2 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

2 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

2 hours ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

2 hours ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

2 hours ago

ஷாருக்கான் குடும்பத்துடன் லால்பாக்சா ராஜா விநாயகரை தரிசனம்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மும்பையில் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் பந்தலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். மனைவி…

2 hours ago