Why Has Renu Desai Not Remarried After Divorcing Pawan Kalyan Actress Opens Up
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வருபவர் நடிகர் பவன் கல்யாண். அரசியலில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் இவர், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராகவும் திகழ்கிறார். இந்நிலையில், தனது மூன்றாவது மனைவியான அன்னா லெஷ்னேவாவுடனான திருமண உறவை முறித்துக்கொண்டு சட்டப்பூர்வமாகப் பிரிய உள்ளதாக அவர் சமீபத்தில் அறிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கு முன்பாக கடந்த 2009-ம் ஆண்டு நடிகை ரேணு தேசாயை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு அகிரா நந்தன், ஆத்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2012-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில், பவன் கல்யாணுடனான திருமண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட உறவு குறித்து ரேணு தேசாய் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பழைய பேட்டி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் பேசிய ரேணு தேசாய், ஆண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளும் சமூகத்தில், ஒரு பெண் மற்றொரு உறவைப் பற்றி நினைப்பதுகூட தவறாகப் பார்க்கப்படுவதாக வேதனை தெரிவித்திருந்தார்.
மேலும் பவன் கல்யாணுடனான தனது உறவு குறித்து அவர் கூறுகையில், “அவரைப் புரிந்துகொள்வதில் எனக்கு இருந்த நெருக்கத்தை அவரே மறுக்க மாட்டார் என நினைக்கிறேன். நான் அவருடைய மனைவி மட்டுமல்ல, அவருடன் இணைந்து பணியாற்றியவரும்கூட. ஒருவருடன் 24 மணி நேரமும் இருக்கும்போது, அது ஒரு முழுமையான வாழ்க்கையாக மாறிவிடுகிறது. நாங்கள் கணவன், மனைவியாக மட்டுமல்லாமல் நல்ல நண்பர்களாகவும் இருந்தோம். அதனால் அவர் என்னிடம் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்.
ஒரு பெண் வருத்தத்துடனேயே தனது வாழ்நாள் முழுவதும் தனியாக வாழ வேண்டுமா? கடந்த ஆண்டு வரை எனது மனநிலை முற்றிலும் முடங்கியிருந்தது. திருமணம், காதல் என எதிலும் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. இப்போதும் வழக்கமான காதல் கதையை எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனக்கும் ஒரு துணை தேவை” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட காலகட்டத்தில் தனக்கு ஒரு துணையின் அவசியம் ஏற்பட்டதாகவும், எதிர்காலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் ரேணு தேசாய் ஏற்கெனவே சில நேர்காணல்களில் வெளிப்படையாகப் பேசியிருந்தார். இருப்பினும், தற்போது வரை அவர் மறுமணம் செய்துகொள்ளாமல் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் நடிகை…
நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் போஸ்டரைப் பகிர்ந்து இப்படம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.…
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே நடிகை பிரியா பவானி சங்கரும், ராஜவேலுவும் காதலித்து வந்தனர். நீண்டகாலமாகத் தொடர்ந்த இவர்களது காதல்…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
Theeraaganam Lyrical Video | Family Boy | Mithun Manickam | Nirmal JP | Adithya RK…
Ala Bolelo Video Song | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…