Why Did Suriya Choose Scotland for His Wedding Anniversary Celebration Actor Explains
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ள இவர்கள், தங்களது திருமண நாளை இந்த ஆண்டு வித்தியாசமான முறையில் கொண்டாடினர்.
ஸ்காட்லாந்தில் மகன் தேவ், மகள் தியா முன்னிலையில் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் கார்த்தி, தியா உள்ளிட்டோர் நெருங்கியவர்களாக உடனிருந்தனர்.
தங்களது 20-வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சூர்யா – ஜோதிகா இருவரும் சமூக வலைதளங்களில் ‘The Sequel’ என்ற தலைப்பில் பகிர்ந்திருந்தனர்.
இதுதொடர்பாக ஜோதிகா வெளியிட்ட பதிவில், 20 ஆண்டுகால அன்பு, சண்டைகள், புரிதல், விட்டுக்கொடுத்தல், தியாகம் மற்றும் சுயநலமற்ற அன்பை கொண்டாடும் விதமாக மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார். மேலும், தங்களது அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொடக்கம் இது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், தங்களது திருமண நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், திருமண வாழ்க்கை குறித்த சூர்யா – ஜோதிகாவின் பேச்சுகளுடன், அவர்களின் திருமண நிகழ்வின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் சூர்யா தனது பதிவில், பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளும், ஏரிகளும் நிறைந்த ஸ்காட்லாந்து தங்களது காதலை பிரதிபலிப்பதாக இருந்ததால் அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் இருந்து திரும்பும்போது வெறும் நினைவுகளை மட்டுமல்லாமல், பரந்த மனதுடனும் உண்மையான அன்புடனும் பழகிய மனிதர்களின் நினைவுகளையும் தங்களுடன் எடுத்துச் சென்றதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மும்பையில் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் பந்தலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். மனைவி…