இந்துக்களின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இதில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக வரும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆங்கில டிரெய்லர் மூலம் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் தமிழ் டிரெய்லர் கடந்த ஜூலை 30 அன்று பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.15 மணிக்கு வெளியிடப்பட்டது. மேலும், ரவி துபே, சன்னி தியோல், அருண் கோவில், லாரா தத்தா, ரகுல் ப்ரீத் சிங், குணால் கபூர், ஷோபனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட படத்திற்கு, உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

